லிப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் - பொறியாளர்கள் பணி நீக்கம்

Government of Tamil Nadu Ma. Subramanian
By Thahir Dec 02, 2022 02:29 AM GMT
Report

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மின் தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

லிப்டில் சிக்கிய அமைச்சர் 

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட சிகிச்சைச் நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு,  மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் பங்கேற்க கடந்த 29.11.2022 அன்று சென்றார்.

அப்போது, அமைச்சர், முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர்.

Minister M. Subramanian stuck in the lift - Engineers sacked

லிப்டில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டது.

பொறியாளர்கள் பணி நீக்கம் 

இது தொடர்பாக அமைச்சர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி மின்தூக்கி (Lift) பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் திரு.டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.