என்னை அடையாளம் காட்டியதே பெரியப்பாதான் : அன்பழகன் குறித்து உருகிய முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அன்பழகன் நூற்றாண்டு விழா
அதன்படி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
எல்லாமே என் பெரியப்பாதான்
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கருணாநிதி, க.அன்பழகன் இருவரின் நட்பும், நம்பிக்கையும் போல் அரசியல் வரலாற்றில் காண்பது அரிது என புகழாரம் சூட்டினார். தனது அரசியல் வாழ்க்கையே அன்பழகனிடம் இருந்து தான் தொடங்கியது என்றும், வாரிசு என்ற குற்றச்சாட்டைச் சிலர் சுமத்திய போது கல்வெட்டு போலப் பாராட்டியவரும் அன்பழகன்தான் என்றும் நினைவுக் கூர்ந்தார்.
மேலும் பேசிய முதல்வர், ஸ்டாலின் எனக்கும் வாரிசு என சான்றிதழ் கொடுத்தவர் என் பெரியப்பாவான பேராசிரியர். அண்ணா அறிவாலயத்தை ஆள வைத்ததும்; கழகத்தை ஆள வைத்ததும்; கோட்டைய ஆள வைத்ததும் என் பெரியப்பா தான். அவரின் பாராட்டுகளே என்னை இந்த அளவுக்கு வளர்த்துள்ளது என்றார்.