தமிழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி
Corona
DMK
Sivasankaran
By mohanelango
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது.
ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. நாளை முதல் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 15 நாட்கள் முழு முடக்கம் அமலுக்கு வர இருக்கிறது.
தற்போது தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தன்னை வீட்டிலேயே தனிமைபடுத்திகொண்டுள்ளார். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.