தரம் புரிந்து பேசுங்க.. யார் யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்? அமைச்சர் கடும் தாக்கு!

Anbumani Ramadoss M K Stalin Tamil nadu S. S. Sivasankar Ariyalur
By Swetha Nov 26, 2024 03:33 AM GMT
Report

முதல்வரின் தரம் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் 

அரியலூரில், திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த நிகழ்வில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு மக்களை நோக்கி வருவதற்கு ராமதாஸ் துடித்துக் கொண்டுள்ளார்.

தரம் புரிந்து பேசுங்க.. யார் யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்? அமைச்சர் கடும் தாக்கு! | Minister Sivasankar Slams Anbumani Over His Speech

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்புதான் இந்த 10.5 சதவீதம் பிரச்னையை கையில் எடுத்து போராட்டம் செய்தார். தேர்தல் அறிவிக்கும் அன்று காலையில் சட்டமன்றத்தில் அறிவித்தனர். தரவுகள், ஆதாரங்கள் இல்லாததால் அது செல்லாது என நீதிபதி தெரிவித்தார்.

டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் இவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உங்களுடைய டாக்டர் வேலையை பாருங்கள். தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டை பார்த்து பார்த்து செய்து கொடுத்தவர் கலைஞர்.

ஆட்சியில் இருக்கிறோம் என்கின்ற ஆணவம்? தமிழிசை கடும் கண்டனம்!

ஆட்சியில் இருக்கிறோம் என்கின்ற ஆணவம்? தமிழிசை கடும் கண்டனம்!

மன்னிப்பு 

அவருக்கு தெரியாதது உங்களுக்கு எதுவும் தெரிந்துவிடப் போவதில்லை. தற்பொழுது முதல்வர் செய்யும் சாதனைகளை பார்த்து மற்ற மாநிலங்கள் அவற்றை நிறைவேற்றி வருகின்றன. என்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் அறிவார். அதை செய்து கொண்டிருக்கிறார். செய்வார்.

தரம் புரிந்து பேசுங்க.. யார் யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்? அமைச்சர் கடும் தாக்கு! | Minister Sivasankar Slams Anbumani Over His Speech

முதல்வரை தரக்குறைவாக விமர்சனம் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். டாக்டர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் யார், அவருடைய தரம் என்ன என்பதை புரிந்து கொண்டு பேச வேண்டும். இவரை பார்த்து மன்னிப்பு கேட்க சொல்கிறார்.

யார் யாரைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும்? இந்தியாவை ஆட்டிக் கொண்டிருக்கும் மோடியை, அமிர்ஷாவை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின். கொள்கை ரீதியாக,

சித்தார்தம் ரீதியாக எதிர்க்கிறோம் என்று துணிச்சலாக நின்று பேசியவர் எங்கள் முதல்வர். திராவிட முன்னேற்ற கழகத்தை எச்சரிக்கின்ற வேலை எல்லாம் நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.