இந்தியாவிலேயே தலை சிறந்த சட்ட உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்தான் : அமைச்சர் சேகர்பாபு புகழாரம்
உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு:
சென்னை சிந்தாகிரிபேட்டை பகுதியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு :
234 தொகுதிகளிலும் பாசறை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஒரு தலைவர் உண்டு என்றால் ஒரு அணி செயலாளர் உண்டு என்றால் அது உதயநிதி ஸ்டாலின்தான் என திமுக பெருமையோடு நெஞ்சை நிமிர்த்தி கூறிக் கொண்டிருக்கிறது.
முதலமைச்சர் அங்கீகாரம் வழங்குவார் :
இயக்கப்பணி என்றாலும் மக்கள் பணி என்றாலும் தொடர்ந்து தன்னை முன்னிலைபடுத்திபடுத்திவருகின்றார்.வருங்காலங்களில் அவர் தமிழகத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார், அதற்கு உரிய அங்கீகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.