ஊரடங்கு நேரத்தில் மின்தடை இருக்குமா? - அமைச்சர் செந்தில் பாலாஜி பதில்
தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மின்தடை இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள பொதுமக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட மின் சாதங்களை இயக்கி தங்களது பொழுதை கழித்து வருகின்றனர். அதேசமயம் மின்தடை ஏற்பட்டால் அவற்றின் பழுது உடனடியாக மின் வாரிய ஊழியர்களால் சரிசெய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை என்பது இருக்காது. பராமரிப்பு பணிக்காக அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருந்து பணி புரிவதாலும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.