திருமண மண்டபங்களில் மதுபானத்திற்கு அனுமதியில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

V. Senthil Balaji DMK
By Irumporai Apr 24, 2023 06:47 AM GMT
Report

சர்வதேச விளையாட்டு போட்டிகள் , மாநாடுகளில் மட்டுமே மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

திருமணங்களில் மதுபானங்கள்

இன்று காலை தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது , அதில் விளையாட்டு போட்டிகள் திருமணங்களில் மது பானங்கள் பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

திருமண மண்டபங்களில் மதுபானத்திற்கு அனுமதியில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் | Minister Senthilbalaji Alcoholic Beverages

இந்த நிலையில் அரசின் அறிவிப்பு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார் : கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகள், சர்வதேச மாநாடுகளில் மட்டுமே மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி என்று விளக்கம் அளித்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்

திருமணம் போன்ற ஒருநாள் நிகழ்வுகளில் அரசு அனுமதியுடன் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற தகவலில் உண்மையில்லை என்றும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்த அரசு ஒருபோதும் அனுமதி தராது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டார். இந்த சர்வதேச நிகழ்வுகளில் மதுபான அனுமதி என்பதும், மற்ற மாநிலங்களில் உள்ளது போல நிபந்தனைகளை பின்பற்றி தான் தமிழகத்திலும் இந்த மதுபான அனுமதி செய்லபடுத்தப்பட உள்ளது என விளக்கமளித்தார்.