அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கு : மருத்துவமனை புதிய தகவல்.

V. Senthil Balaji DMK
By Irumporai Jun 14, 2023 02:57 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

அமலாக்கத்துறை சோதனை

அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்படுகையில் நெஞ்சுவலி காரணமாக, தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி இருக்கு : மருத்துவமனை புதிய தகவல். | Minister Senthil Balajis Health Omanturar Hospital

மருத்துவமனை தகவல் 

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படும் எனவும், சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.