அமலாக்கத்துறையினரால் வந்த வினை - ஜெயிலில் உடல் மெலிந்து போன அமைச்சர் செந்தில் பாலாஜி..!

V. Senthil Balaji Supreme Court of India Enforcement Directorate
By Thahir Aug 08, 2023 03:15 AM GMT
Report

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து அவர் நேற்று இரவு சிறையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

உச்சநீதிமன்றம் உத்தரவு 

சட்டவிரோத பணப்பறிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் கடந்த மாதம் இறுதியில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அவரை அமலாக்கத்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்ததாக கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

Minister Senthil Balaji emaciated in prison.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் நேற்று, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சரியானது என்று கூறி அவரை 5 நாட்களுக்கு அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பதாகவும், அவரை வரும் 12-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உடல் மெலிந்த நிலையில் செந்தில் பாலாஜி 

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்ததை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணைக்காக நேற்று இரவு சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் சென்றனர்.

Minister Senthil Balaji emaciated in prison.

அப்போது நீல நிற சட்டை கருப்பு நிற பேண்ட் அணிந்து முகத்தில் தாடியுடன் வந்தார். அவர் உடல் சற்று மெலிந்தும் காணப்பட்டார்.

அமலாக்த்துறை அதிகாரிகள் அவரிடம் நள்ளிரவு முதல் காலை வரை  விசாரணை நடத்தினர். நாள் ஒன்றுக்கு அவரிடம் 50 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.