சும்மா உருட்டாமல் இருங்க : அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டல்
திருச்சி விமான நிலையைத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணிக்கையில் 2 தேசிய கட்சி பிரமுகர்கள் அவசரகால கதவை திறந்ததால், அங்கு பரபரப்பு நிலவியது மேலும், விமானம் புறப்படும் நேரமும் தாமதமானது.
விசாரணை
இந்த விவகாரம் தொடர்பாக, தற்போது விமானத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகர்களிடம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை குறிப்பிடும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தை விமர்சித்துள்ளார்.
அமைச்சர் விமர்சனம்
2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று அதனை விமான போக்குவரத்து அமைச்சகம் (DGCA) விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. ‘
2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்றென உருட்டிய பொய்யர், சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. pic.twitter.com/yzWrd97dxs
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) January 17, 2023
வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டியது போல, சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.