மாணவர்கள் மதுஅருந்தி ரகளை செய்தால், அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி பொறுப்பேற்க முடியும்? நீதிமன்றம் கேள்வி
டாஸ்மார்க மதுபான விற்பனை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிகுறித்த வழக்கினை தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமாருக்கு தடைவிதிக்க கோரிய வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த போது செந்தில் பாலாஜி சார்பாக வாதடிய வழக்கறிஞர் எம்.எஸ் .கிருஷ்ணன் நிர்மல் குமார் செந்தில் பாலாஜி மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்காமல் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதாக வாதிட்டார்.

மேலும், தமிழகத்தில் கஞ்சா, குட்கா, போன்ற போதைப்பொருட்கள்விற்பனையாவதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜியை எப்படி குறை கூறமுடியும்? அவர் முதலமைச்சரோ ? கிடையாது என வாதிட்டார்.
நீதிமன்றம் வாதம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இது போன்ற நிகழ்வுகளுக்கு பொறுப்பில்லை என அமைச்சரான செந்தில் பாலாஜி எப்படி கூற முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். பின்னர், செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது