அந்த கோமாளியை பற்றி கேள்வி கேட்க வேண்டாம் : கொந்தளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

V. Senthil Balaji DMK BJP K. Annamalai
By Irumporai Nov 01, 2022 10:10 AM GMT
Report

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

தயார் நிலையில் மின் கம்பங்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றரை லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. மின்பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார். 

 கோமாளி பற்றி கேட்காதீர்கள்

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாநில பாஜக தலைவர் அரசியல் கோமாளி போன்று செயல்படுவதாகவும், கோட்டை ஈஸ்வரன் கோவிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தததை விட கோமாளித்தனம் வேறு என்ன இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கோமாளியை பற்றி கேள்வி கேட்க வேண்டாம் : கொந்தளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி | Minister Senthil Balaji Bjp Annamalai

மேலும் இது போன்ற கோமாளி பற்றி கேள்விகளை தயவு செய்து கேட்காதீர்கள். முதலமைச்சரின் செய்திகளை விட, சில கோமாளிகளின் செய்திகள் தான் ஒருசில பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வருகிறது. செய்திகள் வெளியிடுவதில் பத்திரிக்கையையோ, தொலைக்காட்சிகளையோ ஆளும் கட்சியினர் மிரட்டியது கிடையாது.

பத்திரிக்கையாளர் மீது அக்கறை

பாஜகவினர் செய்வது போல் ஆளுங்கட்சியினர் செய்வது கிடையாது. பத்திரைக்கையாளர்கள் மீது அக்கறை கொண்ட ஒரே தலைவர் நமது முதலமைச்சர். அதனால் தான் ஓய்வுபெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கியுள்ளார் என கூறினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் செதில்பாலஜியிடையே பனிப்போர் நிலவி வருவவது குறிபிடத்தக்கது.