தனுஷின் அரசியல் வருகை குறித்த கேள்வி - ஒரே வரியில் அமைச்சர் செங்கோட்டையன் பதில்
minister sengottaiyan reacts to dhanush political entry: தனுஷின் அரசியல் வருவது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரே வரியில் பதிலளித்துள்ளார்.
தனுஷ் அரசியல் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில்
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதை உறுதிப்படுத்தும் வகையில், தனுஷ் ரசிகர்கள் மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்ததோடு, ரசிகர்கள் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றினார்.
நேற்று முன்தினம் டெல்லி சென்றுள்ள அவர் அங்கு 2 நாள் முகாமிட்டு, அரசியல் தொடர்பாக பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையனிடம் தனுஷ் கட்சி தொடங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு, "அரசியலுக்கு வர வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. அது மக்கள் தீர்ப்பு" என ஒரு வரியில் பதிலளித்துள்ளார்.
முதலாளிகளின் கோரிக்கைக்கு தலையசைக்கும் கடற்றொழில் அமைச்சர்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு IBC Tamil
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan