அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி... காரணம் என்ன?
அமைச்சர் செங்கோட்டையன் உடல்நலக் குறைவு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செங்கோட்டையன், முதலமைச்சரின் வலதுகையாக இருந்து வருகின்றார்.
இவர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், விஜய்யின் தவெக கட்சியில் மூத்த அமைச்சராக இருக்கின்றார்.

முதலில் இவருக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பின்பு அவரது விருப்பத்திற்கு ஏற்ப வருவாய் துறை மாற்றப்பட்டுள்ளது.
இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காணப்பட்டதால் கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாந்தி பிரச்சனையும் உள்ள நிலையில், தற்போது அவரது உடல் சீராக இருப்பதாகவும், நாளை காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகின்றது.

கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் - முதல்வர் விஜய் IBC Tamil
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan