இனி ஒருவர் கூட உணவின்றி தவிக்க கூடாது..! அமைச்சர் சேகர்பாபு அதிரடி...!
தமிழகத்தில் ஒருவர் கூட இனி உணவின்றி தவிக்க கூடாது என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எழும்பூர் சட்டமன்ற தொகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தை எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் முன்னிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதிமாறன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் சாலையோரங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்று முதலமைச்சர்ரின் அறிவுறுத்தல் படி இந்த உணவு அளிக்கும் திட்டத்தை இன்று தொடங்கி உள்ளோம் என்றும், இனி தினந்தோறும் சாலையோரம் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்