ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புதிய கொரோனா சிகிச்சை மையம்: அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
ஆக்சிஜன் படுக்கைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் தமிழக அரசு விரைந்து படுக்கை எண்ணிக்கைகளை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்கனவே இயங்கி வந்த கொரோனா சிகிச்சை மையத்தை விட கூடுதலாக 136 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு அமைச்சர் சேகர் பாபு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
உடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள்..
— Dayanidhi Maran தயாநிதி மாறன் (@Dayanidhi_Maran) May 21, 2021
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உடன் இருந்தார். அப்போது மருத்துவமனையில் மேற்கொள்ளபட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.