முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை; தற்போதைய நிலை என்ன? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்வர் வழக்கமான நடைப்பயிற்சியின் போது லேசான தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும், தேவையான மருத்துவப் பரிசோதனை நடந்து வருவதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து, முதல்வர் சில நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனையடுத்து, முதல்வரின் சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும், மருத்துவமனையில் இருந்தே பணிகளை தொடர்ந்து வருகிறார்.
ஆஞ்சியோ பரிசோதனை
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாகவும், எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்று மருத்துவர்களே முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.