'கோர்ட்டில் நியாயம் தேடுங்க' : அமைச்சர் சாமிநாதன் பேச்சு!

Case Minister Saminathan
By Thahir Aug 11, 2021 09:15 AM GMT
Report

''வேலுமணி தரப்பில், நியாயம் இருக்குமானால், கோர்ட்டில் நியாயத்தை தேடி கொள்ளட்டும்,'' என, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.திருப்பூரில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த, 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, எங்கள் மீது வழக்குகள் போடப்பட்டன. அதை கோர்ட்டில் சந்தித்தோம்.

என் மீது பதியப்பட்ட வழக்கு, குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்ய முடியாத, சித்தரிக்கப்பட்ட வழக்கு. வேலுமணி மீது வந்த புகாரின் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தரப்பில், நியாயம் இருக்குமானால், கோர்ட்டில் நியாயத்தை தேடி கொள்ளட்டும். யாருக்கும் ஆட்சேபனையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.