இனி... திரைப்படம், சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன்.. - அமைச்சர் ரோஜா பேட்டி - ரசிகர்கள் வேதனை

minister Interview பேட்டி அமைச்சர் Rooja ரோஜா
By Nandhini Apr 12, 2022 06:35 AM GMT
Report

கடந்த 2019ம் ஆண்டு ஆந்திராவில் முதலமைச்சரானார் ஜெகன்மோகன் ரெட்டி. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனார்கள்.

இந்த அமைச்சர்களுடைய பதவி இரண்டரை ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அதன் பின்னர் புதியவர்களுக்கு மீதமுள்ள இரண்டரை ஆண்டுகள் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்க பணியை ஜெகன்மோகன் ரெட்டி மேற்கொண்டார். இதற்காக, கடந்த வாரம் அனைத்து அமைச்சர்கள் தன் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனைடுத்து, மந்திரிகளில் அனுபவம் வாய்ந்த பத்து பேரோடு புதிதாக 15 பேருக்கு புதிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதில் நகரி எம்எல்ஏ நடிகை ரோஜாவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இதன் பின்பு, ரோஜாவின் வீட்டின் அருகிலும், கட்சி அலுவலகத்தின் முன்பாகவும் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கி தொண்டர்களும், ரசிகர்களும் கொண்டாடினர்.

நேற்று அமைச்சராக நடிகை ரோஜா பதவியேற்க மேடைக்கு வந்தபோது, அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக, விசில் அடித்து, கை தட்டி வரவேற்பு கொடுத்தனர்.

இதனால் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றார் நடிகை ரோஜா. நடிகை ரோஜாவிற்கு சுற்றுலாத்துறை மற்றும் கலை விளையாட்டுதுறை ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரோஜா, முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொடுத்த வாய்ப்பை வாழ்நாளில் எப்போதும் மறக்க மாட்டேன். இனி ஆந்திர மாநில மக்களுக்காக அயராது பாடுபடுவேன். திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சியில் இனி கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். 

இனி... திரைப்படம், சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன்.. - அமைச்சர் ரோஜா பேட்டி - ரசிகர்கள் வேதனை | Minister Rooja Interview