Tuesday, May 6, 2025

போதைப் பொருள் கடத்துவோர், ரவுடிகளை கட்சியில் சேர்த்தது பாஜக தான் - அமைச்சர் ரகுபதி!

Tamil nadu DMK S. Regupathy
By Jiyath a year ago
Report

போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி பாஜகதான் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  

அமைச்சர் ரகுபதி

நாகர்கோவிலில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

போதைப் பொருள் கடத்துவோர், ரவுடிகளை கட்சியில் சேர்த்தது பாஜக தான் - அமைச்சர் ரகுபதி! | Minister Regupathy About Bjp Party

குஜராத்தில்தான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பது நாடறிந்த உண்மை. போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி பாஜகதான். தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 16 குற்றவாளிகளை பாஜக கட்சியில் இணைத்துள்ளது.

பழி போட வேண்டாம்

2022-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2,016 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் வழக்குகளில் 80 சதவீதத்துக்கு அதிகமானவர்களுக்கு தண்டனையை திமுக அரசு பெற்றுத்தந்துள்ளது.

போதைப் பொருள் கடத்துவோர், ரவுடிகளை கட்சியில் சேர்த்தது பாஜக தான் - அமைச்சர் ரகுபதி! | Minister Regupathy About Bjp Party

தமிழகத்தில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி நடைபெறுகிறது. யாரும் குழப்பத்தை விளைவிக்க முடியாது. தேர்தலுக்காக தமிழக அரசு மீது பிரதமர் மோடி பழிபோடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தலுக்காக தமிழக அரசு மீது மத்திய அரசு பழி போட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.