அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள்

Murugan
By Fathima May 29, 2026 08:50 AM GMT
Report

திருச்செந்தூர் கோயிலுக்கு ஆய்வு செய்ய சென்ற தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை சிறப்பு தரிசனத்துக்கு அழைத்து செல்ல 4000 ரூபாய் லஞ்சமாக அர்ச்சகர்கள் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இவர் ஆய்வு செய்து வரும் நிலையில், இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றார்.

அமைச்சரிடமே லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் | Minister Ramesh Investigate Tiruchendur Temple

அவர் வரும் தகவலை யாருக்கும் தெரிவிக்காமல் டிஷர்ட் அணிந்து முகமூடியுடன் கோவிலுக்கு சென்றார், விரைவாக தரிசனத்துக்கு செல்ல வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என விசாரிக்க ஒருவருக்கு 1000 ரூபாய் என மொத்தமாக 4000 ரூபாய் லஞ்சமாக வேண்டும் என கேட்டுள்ளனர்.

ஆதாரத்துடன் கையும் களவுமாக கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் சிக்கினர், இதனை தொடர்ந்து மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.