தமிழக அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Government of Tamil Nadu Sattur Ramachandran
By Thahir Jul 22, 2022 10:34 AM GMT
Report

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமைச்சருக்கு கொரோனா தொற்று 

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் 18-ம் தேதி வீடு திரும்பினார்.

இதை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். தற்போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் விருதுநகரில் உள்ள தனது இல்லத்தில் அமைச்சர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சரை தொடர்ந்து அடுத்தடுத்து அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.