பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தமிழகம் வருகை : வியூகம் அமைக்கும் பாஜக ?
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று பாஜக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழகம் வர உள்ளார்.
ராஜ்நாத்சிங்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தலைமையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று ஜூன் 20 ஆம் தேதி சென்னை தாம்பரம் இரும்புலியூரில் உள்ள டி.டி.கே நகர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது, பாஜக சார்பில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று பிற்பகல் 4 மணியளவில் சென்னை வருகிறார்.
தமிழகம் வருகை
இதனை முடித்துக்கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்திக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த வாரம் ஜூன் 11 இல் அமித்ஷா சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வந்திருந்தார், இவரையடுத்து தற்போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவுள்ளார் , ஒரு தமிழனைத்தான் பிரதமராக்குவோம் என அமித்ஷா கூறியிருந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக வை சேர்ந்த முக்கியப்புள்ளிகள் தமிழகம் முகாமிட்டுள்ளனர். இது பாஜகவின் தேர்தல் வியூகமாக இருக்கலாம் என கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள்.