நேபாளத்தில் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை - அமைச்சர் ராஜ்மோகன்

Tamil nadu Nepal Flood Rajmohan
By Karthikraja Aug 28, 2026 01:57 PM GMT
Report

minister rajmohan says 90 tamils unreachable in nepal: நேபாளத்தில் சுமார் 90 தமிழர்களை தற்போது வரை தொடர்பு கொள்ள முடியவில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

நேபாள பெருவெள்ளம்

சீன மற்றும் நேபாள எல்லையில் நேற்று முன்தினம் பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மேலும், 1500க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது. 

நேபாளத்தில் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் | Minister Rajmohan Says 90 Tamils Unreachable Nepal

இந்த சூழலில், தமிழ்நாட்டிலிருந்து நேபாளத்திற்கு சென்று அங்கு ஏராளமான சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 4 அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு டெல்லி சென்றுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டை சேர்ந்த 54 பேர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர். 

நேபாளத்தில் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் | Minister Rajmohan Says 90 Tamils Unreachable Nepal

அவர்கள் 3 பேருந்துகள் மூலமாக சென்றதில் ஒரு பேருந்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக அங்குள்ள ராணுவ முகாம் ஒன்றில் தஞ்சமடைந்தனர். அதன் பின்னர் காட்மாண்டிற்கு சென்று அங்கிருந்த விமானம் மூலமாக டெல்லிக்கு வந்தடைந்துள்ளார்.

இன்று இரவு 8 மணிக்கு டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு வர உள்ளனர்.

90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "மீட்கப்பட்டுள்ள 21 தமிழர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர். இன்று இரவு அவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு செல்கின்றனர். 

நேபாளத்தில் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை - அமைச்சர் ராஜ்மோகன் | Minister Rajmohan Says 90 Tamils Unreachable Nepal

இவர்கள் பாஸ்போர்ட்டை தவற விட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்னென்ன உதவி தேவையோ அதையெல்லாம் செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழு 3 பேருந்துகளில் சென்றதில் நடுவில் சென்ற இவர்களது வாகனம் தப்பியுள்ளது. இது போன்ற பெரிய குழு சிறிய குழுக்களாக, ரயில் மூலமும் பலர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

சுமார் 400 பேர் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 140 பேர் கொண்ட குழு பாதுகாப்பாக உள்ளது. அவர்களை காத்மாண்டு வழியாக கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருகிறது.

சுமார் 90 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.