1000 ரூபாய் பாஸ் செல்லுமா? - அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

Minister raja kannappan MTC bus service
By Petchi Avudaiappan Jun 21, 2021 12:06 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 மே மாதம் வாங்கிய 1000 ரூபாய் மாதாந்திர பாஸ் ஜூலை 15 வரை செல்லும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னையில் அரசு பஸ்கள் இரவு 9.30 மணிவரை இயக்கப்படும் என்று கூறினார்.

மேலும், மே 16ம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை பயணம் செய்யும் வகையில் 1000 ரூபாய் பாஸ் வாங்கியவர்கள் அந்த பாஸை ஜூலை 15ஆம் தேதிவரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.