தமிழக அமைச்சரவையில் மாற்றம் - அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாகா பறிப்பு
தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை
தமிழகத்தில் கடைசியாக 4 மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார்.
மேலும், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிறையில் இருந்து, ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ராஜகண்ணப்பன்
உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
தற்போது ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் துறையை, வந்துறையை சேர்த்து அமைச்சர் பொன்முடி கவனிப்பார். அமைச்சர் ராஜ கண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மட்டும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பொன்முடி பதவி இழந்த போது, அவர் கவனித்து வந்த உயர்கல்வித்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த வழக்கில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு மீண்டும் பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.