TNPSC குரூப்-2 தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் பி.டி.ஆர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க முடியாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது டிஎன்பிஎஸ்சி - ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதால் கிராமப்புற மாணவர்கள் விண்ணப்பிக்க முடியவில்லை. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கால அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,2020 ஆம் ஆண்டு ஒரே விண்ணப்பதாரர் 2 முறை விண்ணப்பிக்க கூடாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது கொண்டு வரப்பட்டது. எனவே விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீடிக்க முடியாது.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடத்திற்கு இதுவரை 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதனை வேறு வகையில் சரி செய்ய முடியுமா என்று தேர்வு ஆணையத்தில் ஆலோசித்து அடுத்த தேர்வுக்கு முன்னர் இது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.