சாலை சரியில்லை - புகாரளித்த நபரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்!

Madhya Pradesh
By Sumathi Jan 18, 2023 05:43 AM GMT
Report

சாலை குறித்து புகார் அளித்தவரின் காலையை சுத்தப்படுத்தி அமைச்சர் மன்னிப்பு கோரினார்.

தரமற்ற சாலை

மத்தியப்பிரதேசம், குவாலியரில் வினய் நகர் என்ற இடத்தில் அம்மாநில அமைச்சர் பிரதுமான் சிங் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது தரமற்ற சேரும் சகதியமான சாலையால் பெரும் அவதிக்கு ஆளாவதாக அப்பகுதி மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

சாலை சரியில்லை - புகாரளித்த நபரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட அமைச்சர்! | Minister Pradhuman Singh Washes Leg To Man

அவர்களின் கால்கள் சேறும் சகதியும் நிறைந்து காணப்பட்டது. உடனடியாக தண்ணீர் கொண்டு வர சொன்ன அமைச்சர், ஒருவரின் காலை சுத்தப்படுத்தி தரமற்ற சாலைக்கு மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து, அப்பகுதியை ஆய்வு செய்த அமைச்சர், தரமற்ற சாலைக்கான காரணத்தை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

காலை கழுவிய அமைச்சர்

கால்வாய் அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டதால் சேதம் அடைந்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். அதனை உடனடியாக சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இவர் ஏற்கனவே கழிவறையை சுத்தம் செய்வது, தெருவை தூய்மையாக்குவது உள்ளிட்ட பணிகளை செய்து கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.