கொரோனாவை விரட்ட விமானநிலையத்தில் அமைச்சர் நடத்திய பூஜை - வீடியோ வைரலானது!

covid airport poojai Devi Ahilyabai
By Jon Apr 11, 2021 05:43 PM GMT
Report

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. பிறகு மத்திய, மாநில அரசுகள் ஊரடங்குகளை விதித்து கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் கொரோனா படிப்படியாக குறைந்து வந்த நிலையில், சில தளர்வுகளை மத்திய அரசும், மாநில அரசும் அறிவித்தன.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த போது, தற்போது, கொரோனாவின் இரண்டாம் அலை அரசு வேகத்தில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. முன்பை விட இந்த கொரோனாவின் 2ம் அலை மோசமாகப் பரவி வருகிறது. டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது.  

இந்நிலையில், ம.பி. அமைச்சர் ஒருவர் விமான நிலையத்தில் கொரோனாவை விரட்டியடிக்க ஒரு செயலை செய்திருக்கிறார். ம.பி. மாநில பாஜக அமைச்சராக இருப்பவர் உஷா தாக்கூர். இவர் தனது ஆதரவாளர்களுடன் இந்தூர் விமான நிலையத்திற்கு வந்தார்.  

பூஜை பொருட்களுடன் தடபுடலாக விமான நிலையத்திற்கு வந்த அவர் வளாகத்தில் இருக்கும் தேவி அஹில்யா பாய் ஹோல்கரின் சிலை முன்பு கைதட்டி கொரோனாவை விரட்டியடிக்க பூஜை வழிபாடு செய்ய தொடங்கினார்.

இந்த பூஜையில், விமான நிலைய இயக்குநர் ஆர்யாமா சன்யாஸ் உள்ளிட்ட பிற பணியாளர்களும் கலந்துகொண்டதுதான் அல்டிமெட். இதனால் விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் இந்த வழிபாடுகளை கண்டு வியந்தனர்.