அமைச்சர் பொன்முடி கார் பைக் மீது மோதி விபத்து : இளைஞர் கவலைக்கிடம்
DMK
K. Ponmudy
By Irumporai
அமைச்சர் பொன்முடியின் கார் இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் கார் மூலம் விபத்து
கடலூர் மாவட்டம் நெல்லி குப்பம் அருகே உள்ள காராமணி குப்பத்தில் அமைச்சர் பொன்முடியின் கார் விபத்துக்குள்ளாகியது , இந்த விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இளைஞருக்கு காயம்
பாதிக்கப்பட்ட இளைஞரை அமைச்சர் பொன்முடி அவரது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சரின் கார் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.