சனாதானம் தான் காலாவதியான கொள்கை : ஆளுநருக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பொன்முடி
ஆளுநர் கூறுவது தவறான தகவல் என்று அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஆளுநர் தகவல்
தமிழக ஆளுநர் அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் செயல்படும் சென்னை பல்கலைகழகத்தின் கல்வி தரம் குறைந்து விட்டதாகவும், அதனால் 10வது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது 100வது இடம் வரை சென்றதாக குறிப்பிட்டு இருந்தார்.
அமைச்சர் மறுப்பு
இதற்கு மறுப்பு தெரிவித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், உயர்கல்வி துறை பற்றி தவறான தகவலை ஆளுநர் கூறி வருகிறார் என குற்றம் சாட்டினார்.
பல்கலைக்கழகம் சரவதேச அளவில் 547வது இடத்திலும், இந்திய அளவில் 12வது இடத்திலும் உள்ளது என குறிப்பிட்டார்.
அதே போல் சென்னை மாநில கல்லூரி, நாட்டில் 3வது இடத்தில் உள்ளது எனவும் தெரிவித்தார். இந்தியாவில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் 53 சதவீதத்தினர் தமிழகத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.