ஏய் லூசு... கட்சி நிர்வாகியை திட்டிய அமைச்சர் பொன்முடி - பரபரப்பு!
அமைச்சர் பொன்முடி தனது கட்சி நிர்வாகியை திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சி
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனம் வழங்கும் விழா நடந்தது. அதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
இதில் பேட்டரியில் இயங்கும் ஆட்டோக்களை பச்சை கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பேசுவதற்கு மைக் கேட்டுள்ளார், அதனை கொடுக்கவில்லை, அதோடு மேடையும் அங்கு அமைக்கப்படவில்லை. இதனால் அமைச்சர் பொன்முடி கடும் கோபமடைந்தார்.
நிர்வாகியை திட்டிய
அமைச்சர் இந்நிலையில், விழா ஏற்பாடு செய்த திமுக நிர்வாகியை அவர் ஒருமையில் திட்டி ‛‛ஏய் லூசு'' என்ற வார்த்தையை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.
மேலும், அமைச்சர் பொன்முடி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் அரசு நகர பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டத்தை ‛ஓசி' என அவர் பேசியதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த வரிசையில் தற்போது இந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியுள்ளது.