யோவ் சும்மா உட்காரய்யா...சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களை அதட்டிய அமைச்சர் பொன்முடி..!
ADMK
DMK
Tamil Nadu Legislative Assembly
By Thahir
சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை சுட்டிக்காட்டி பேசினார்.
அவரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்கு விளக்கமளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,முன்னாள் முதலமைச்சர் குறித்து விமர்சித்து முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசியதை சுட்டிக்காட்டினார்.
அப்போது எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்போது ஆவேசமடைந்த அமைச்சர் பொன்முடி யோவ் சும்மா உட்காரய்யா எனக் கூறினார்.
அதன் பின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கருணாநிதியை விமர்சித்ததால் தான் அமைச்சர் ஆனார் என்று தெரிவித்தார்.