செல்லூர்ராஜூவுக்கே டஃப் கொடுத்த அமைச்சர் பொன்முடி: ஈரோடு பிரச்சாரத்தில் கல கல
ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அங்கு தமிழகத்தின் முக்கிய கட்சிகள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றன.
பொன் முடி செல்லூர் ராஜூ
இந்த நிலையில் ஈரோடு தொகுதியில் திமுகவை சேர்ந்த அமைச்சர் பொன்முடியும் , அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தங்கள் கட்சிகளுக்காக ஒரே வீட்டில் வாக்கு சேகரித்த நிகழ்வு தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்பட்ட ஒரு பகுதியில் அமைச்சர் பொன்முடி திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வந்தார். அதேபோல், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் அதே பகுதியில் வாக்கு சேகரித்து வந்தார்.
வைரலாகும் வீடியோ
ஒரு கட்டத்தில் செல்லூர் ராஜூ வாக்கு கேட்டுக் கொண்டு இருந்த வீட்டிற்கு அமைச்சர் பொன்முடியும் வருகை தந்தார். அப்போது இருவரும் ஒருவரை பார்த்து பரஸ்பரம் வணக்கம் வைத்துக்கொண்டனர். அதோடு செல்லூர் ராஜுவை செல்லமாக தட்டி பொன்முடி சிரித்தபடி பேசிக்கொண்டனர் அப்போது செல்லூர் ராஜூவை நோக்கி அமைச்சர் பொன்முடி “இவரே எங்களுக்குதான் ஓட்டு போடுவார் ஆகவே அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்’’ என்று கூறினார்.
Ponmudy & Sellur Raju having fun time during #ErodeEastByElection pic.twitter.com/VKH3Xg3Z0j
— Kollywood Talks (@kollywoodtalks) February 24, 2023
கடந்த சில தினங்களுக்கு முன்பும் செல்லூர் ராஜூவும் பொன்முடியும் எதிர் எதிரே சந்திக்கொண்ட போது வாக்கு கேட்ட படி நடந்து வந்த செல்லூர் ராஜூ, எதிரே காரில் வந்த பொன்முடியை பார்த்ததும் வணக்கம் செலுத்தி விட்டு.. ஓட்டு கேட்கிறோம் அமைச்சரே.." என்று கூறினார். இதற்கு சிரித்துக் கொண்டே அமைச்சர் பொன்முடியும் வணக்கம் வைத்தார்.