நீங்க sc தானே : அமைச்சர் பொன்முடி பேச்சால் பரபரப்பான மேடை !

DMK
By Irumporai Sep 20, 2022 10:31 AM GMT
Report

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் மணம்பூண்டி புது நகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்துக்கொண்டார்.

அமைச்சர் பொன்முடி

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக செய்த திட்டங்கள் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

நீங்க எஸ்சி தானே

அப்போது எடுத்துக்காட்டிற்காக மேடையில் இருந்த முகையூர் ஒன்றியக் குழு தலைவரை அறிமுகப்படுத்தி பேசும் போது நீங்கள் {எஸ்.சி} தானே..? கேள்வி எழுப்பினர். அதற்கு ஒன்றியக்குழு தலைவர் எழுந்து நின்று ஆமாம் சார் என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

நீங்க sc தானே : அமைச்சர் பொன்முடி பேச்சால் பரபரப்பான மேடை ! | Minister Ponmudi Said Union Committee Leader

பின்னர், மேடையில் பெண்கள் அமர்வதற்கு உரிமை பெற்றுக் கொடுத்ததே திமுக தான் என்றும் உள்ளாட்சி அமைப்புகளில் 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்த உன்னத மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி, பெண்கள் சம உரிமை குறித்து பேசும் போது உதாரணத்திற்காக கூறிய விஷயத்தை எதிர்க்கட்சியினர் இதனை தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் என திமுகவினர் பதில் அளித்து வருகின்றனர்.