அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் காலமானார்
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் தியாகராஜன் இன்று காலமானார்.
அமைச்சர் பொன்முடியின் சகோதரர் காலமானார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடியின் சகோதரர் மருத்துவர் தியாகராஜன். இவர் சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் தியாகராஜனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:30 மணியளவில் நடைபெறுகிறது. விழுப்புரம் - பாண்டி ரோடு காந்தி சிலை எதிரில் மரகதம் மருத்துவமனையில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கப்பட்டு மருதூர் இடுகாட்டில் நல்லடக்கம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.