ஓசி பேருந்து என்ற சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் இலவச பயணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சர்ச்சை பேச்சு
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமைச்சர் பொன்முடி, ஓசி பேருந்து என பேசியிருந்தது கடும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ஓசி பேருந்து என கூறியதற்கு அமைச்சர் பொன்முடி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவானது வியர்வைக்கு வெகுமதி என்ற தலைப்பில் நடைபெற்றது.
அரசியல் செய்கிறார்கள்
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி வாயா போயா என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு கூட தற்போது பயமாக உள்ளது. தலைவர் என்னை பார்த்து இதுபோன்று பேச வேண்டாம் தெரிவித்துள்ளார்.
சகஜமாக பேசிய வார்த்தையை வைத்து அரசியல் செய்கிறார்கள். உண்மையில் யாருடைய மனதாவது புண்படும்படி பேசி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக டார்கெட் செய்து தாக்கி கொண்டிருக்கிறார்கள். தளபதி ஆட்சியில் வேறு எதை வைத்து அரசியல் செய்ய முடியும். ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு அரசியல் செய்கிறார்கள்என்று தெரிவித்துள்ளார்.