'முக்காலா முக்காபுலா'; மாணவிகளுடன் நடனமாடி அசத்திய அமைச்சர் பொன்முடி - வைரலாகும் Video!

Tamil nadu Viral Video K. Ponmudy Viluppuram
By Jiyath Dec 03, 2023 07:13 AM GMT
Report

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி மாணவிகளுடன் இனைந்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அமைச்சர் பொன்முடி 

விழுப்புரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் முன், நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி வருகை புரிந்தது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அலங்கார ஊர்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாணவிகளுடன் நடனம் 

அப்போது நிகழ்ச்சியை பார்வையிட்டு மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் பொன்முடி, திடீரென மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் இனைந்து நடனம் ஆடி மகிழிந்தார்.

அங்கிருந்த பலரும் இதனைப் பார்த்தவுடன் கைத்தட்டி ஆராவாரம் செய்தனர். அமைச்சர் பொன்முடி, மாணவிகளுடன் சேர்ந்து 'முக்காலா முக்காபுலா' பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.