பத்திரிகையாளர்களை ஒருமையில் அழைத்தாரா அமைச்சர் பொன்முடி?
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் தாலுக்கா மேலமங்கலம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த செய்தியாளர்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் சிறப்பு ஊக்கதொகை தாலுக்காவில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அமைச்சரிடம் மனு கொடுக்க செய்தியாளர்கள் சென்றுள்ளனர்.
ஆனால் அவர்களின் மனுவை கையில் வாங்காமல் செய்தியாளர்களை பார்த்து ''யோவ் உங்களால் தான் நோய் தொற்று பரவுகிறது '' என்றும், உங்கள தொடுவதற்கே பயமாக உள்ளது. தள்ளி போ.. என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலானது.