நில அபகரிப்பு வழக்கு ... பொன்முடி விடுவிப்பு - சிறப்பு நீதிமன்றம் !
அரசு நில அபகரிப்பு வழக்கிலிருந்து பொன்முடி உள்ளிட்ட 7 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது
நில அபகரிப்பு வழக்கு
கடந்த 1996 முதல் 2001 வரை அமைச்சர் பொன்முடி அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பதிவு செய்து அங்கு 35 லட்சம் ரூபாயில் கட்டடம் கட்டினார் என்று புகார் எழுந்தது.
அதனால் 2003-ல் லஞ்ச ஒழிப்புத் துறை அவர் மீது விசாரணை நடத்தி பொன்முடி உள்பட சரஸ்வதி, சைதை கிட்டு என 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார்-பதிவாளர் புருபாபு, சைதை கிட்டு ஆகியோர் மரணம் அடைந்தனர்.
7 பேர் விடுதலை
இந்நிலையில், போதிய ஆவணங்கள் இல்லை, குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி நில அபகரிப்பு வழக்கில் இருந்து பொன்முடி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.