தக்காளி விலை உயர்வா ? கவலைப்படாதிங்க : அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி அறிவிப்பு
மழைக்காலத்தை முன்னிட்டு வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில்விற்பனை செய்வது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் தக்காளி விளைச்சலும், வரத்தும் குறைந்துள்ளதால் தக்காளி விலை வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.130க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், கூட்டுறவுத்துறை நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் எனவும்
இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாண்டு பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ. 17.70 கோடி மதிப்பிலான 5290 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.