அதிமுகவின் மகத்தான திட்டம் நிறுத்தமா? - திமுக அமைச்சரின் பதில்
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை என்றும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டபெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் குறித்து நிதிநிலை அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை என தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் திமுவின் தேர்தல் வாக்குறுதியின்படி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்திற்கு பெண்களிடம் தற்போது போதிய வரவேற்பு இல்லை எனவும் அமைச்சர் கூறியுள்ளார். இதனால் அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.