'சீமான் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூ பறித்துக் கொண்டிருக்குமா?' - அமைச்சர் சேகர்பாபு

Naam tamilar kachchi DMK Chennai Seeman P. K. Sekar Babu
By Thahir Feb 01, 2023 08:17 AM GMT
Report

'சீமான் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூ பறித்துக் கொண்டிருக்குமா?' என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

பேனா சிலையை உடைப்பேன் - சீமான் ஆவேசம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே 81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கண்ணன், சென்னை மாவட்ட சுற்றுச்சூழல் எஞ்சினியர் ஜெயமுருகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சீமான் பேசும் போது எதிர்ப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. அப்போது பேசிய சீமான் நினைவுச் சின்னம் வைக்க வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் கடலுக்குள் வைக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.

minister-p-k-sekar-babu-warns-seaman

அப்படி கடலுக்குள் வைத்தால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு வரும் கடலுக்குள் பேனா வைப்பதற்கு கல்லையும், மண்ணையும் கொட்ட வேண்டும். அப்படி கொட்டும் போது அழுத்தம் ஏற்படும். இதனால் கடலில் உள்ள பவளப்பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படும். உங்களை கடற்கரையில் புதைக்கவிட்டதே (கருணாநிதி உடலை) தப்பு.

நீங்கள் இப்போது பேனாவை வையுங்கள். ஒரு நாள் நான் வந்து உடைகிறேன் பார். பேனாவை கடலுக்குள் தான் வைக்க வேண்டுமா? பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை. பேனாவை அண்ணா அறிவாலயத்திலோ அல்லது நினைவிடத்திலோ வைக்க வேண்டியது தானே.

கடலுக்குள் வைப்பதால் 13 மீனவ கிராம மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம். அதை தடுக்கும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம்.இது உறுதி என்று பேசியிருந்தார். இதற்கு திமுகவினர் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? அமைச்சர் 

இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

minister-p-k-sekar-babu-warns-seaman

பின்னர் செய்தியாளரை சந்தித்தார் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சீமான் கடலில் பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்கிறார் என்று கேள்வி எழுப்பியதற்கு,

சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா?. எல்லாருக்கும் கை இருக்கு.. இந்த பதிலே அவருக்கு போது! எனத் தெரிவித்துள்ளார்.