திருச்சியில் கொரோனா சிகிக்சை மையத்தை முதல்வர் திறந்துவைத்தர்!

covid19 tamilnadu dmk trichy mkstalin
By Irumporai May 21, 2021 01:09 PM GMT
Report

திருச்சியில் கலையரங்கம் திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிலையில், இன்று திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 400 படுக்கை வசதிகளை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்

பின்னர் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

பிறகு, அதே அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த 100 படுக்கை படுக்கைகளில் 50 படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாகவும், 50 படுக்கையில் சாதாரண படுக்கைகளாகவும் உள்ளது.