டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை மதிரும்ப பெறவேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

tamilnadu ops wineshop tasmark
By Irumporai Jun 12, 2021 01:43 PM GMT
Report

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவையும் முதலமைச்சர் திரும்ப பெறவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதில், கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது.

இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்பது கொரோனா பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவையும் முதலமைச்சர் திரும்ப பெறவேண்டும்.

கொரோனா உயிரிழப்பு மூன்று மடங்கிற்கும் மேலாக உள்ள நிலையில் டாஸ்மாக்கை திறக்கும் முடிவு முறைதானா..?

அரசு வருவாயை விட மனித உயிர் முக்கியமானது என்ற அடிப்படையில் முடிவை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்