வனத்துறை அமைச்சர் வீட்டருக்கே துயர சம்பவம் - நடந்தது என்ன?
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டின் அருகே ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி துறை அதிகாரி அவருடைய கார் முன்னிருக்கையில் அமர்ந்தவாறு மர்மமான முறையில் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் குப்புசாமி. இவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வீட்டின் அருகே உள்ள பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இருவரும் மருத்துவர்கள் வெளியூரில் பணியாற்றி வருகின்றனர் குப்புசாமி மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலைஅயில் நேற்று இரவு பத்து மணி அளவில் மனைவியிடம் படுக்கை அறைக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்றவர் படுக்கை அறைக்கு செல்லாமல் தனது காரை எடுத்து எங்கு சென்று உள்ளார்.
மீண்டும் வீட்டிற்கு வந்தவர் வீட்டின் அருகே காலைஒ 3:45 மணி அளவில் டமார் என்ற சத்தத்துடன் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது காரில் அமர்ந்தவாறே எந்தவித சத்தமும் இன்றி மர்மமான முறையில் குப்புசாமி உயிரிழந்துள்ளார்.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள் .
இது குறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[