68 வயதில் 46 கிலோ எடையை குறைத்த மத்திய அமைச்சர்... அவரே கூறிய சீக்ரெட்
இந்திய அரசியல் பிரமுகரான நிதின் கட்கரி தனது 68 வயதில் 46 கிலோ உடல் எடையை குறைத்துள்ள சீக்ரெட் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நிதின் கட்கரி
மத்திய அமைச்சரான நிதின் கட்கரி 135 கிலோ எடையினை தற்போது 89 கிலோவாக குறைத்துள்ளார். இவர் தனது அன்றாட பழக்கத்தின் காரணமாகவே உடல் எடையைக் குறைத்துள்ளாராம்.
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. இன்று பலரும் உடல் எடை அதிகரித்து அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி தனது 68 வயதில் உடல் எடையைக் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

46 கிலோ எடையை குறைத்தது எப்படி?
நிதின் கட்கரி கூறுகையில், காலை ஏழு மணிக்கு எழுந்து இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதாகவும், 135 கிலோவாக இருந்த நான் தற்போது 89 கிலோவாக உள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு பின்பு 46 கிலோ உடல் எடையினைக் குஐறத்துள்ளார். எடை குறைப்பதற்கு தீவிர உடற்பயிற்றி மேற்கொண்டுள்ளார். அதாவது தினமும் இரண்டு முதல் இரண்டறை மணி நேரம் உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மூச்சை உள்ளிழுத்து, பிடித்து வைத்து வெளியே விடும் யோகாவான பிராணயாமா தினமும் செய்து வருவதாகவும், இதனால் தனது மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதி மற்றும் ஆற்றலை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
தினமும் இந்த யோகா மட்டுமின்றி வலிமையாக இருப்பதற்கு உடற்பயிற்சியினையும் விடாமல் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

செவ்வாய்–புதன் உருவாக்கும் லாப திருஷ்டி யோகம்: செப்டம்பர் 01முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
வடக்கில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றும் பேருந்துகளுக்கு இறுகும் பிடி : விடுக்கப்பட்ட அறிவிப்பு IBC Tamil
தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு சர்வதேச சுயாதீன பங்களிப்பே ஒரே பதில்! கனகரஞ்சனி யோகராசா திட்டவட்டம் IBC Tamil