எளிமையாக நடந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளின் திருமணம்..!

Smt Nirmala Sitharaman Marriage
By Thahir Jun 08, 2023 11:07 PM GMT
Report

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகள் திருமணம் எளிமையாக நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

எளிமையாக நடத்த அமைச்சரின் மகள் திருமணம் 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் வாங்மயி என்பவருக்கும் பிரதிக் என்பவருக்கும் பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

Minister Nirmala Sitharaman

இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததாகவும் அரசியல் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தனது மகள் திருமணத்தை மிக எளிமையாக நடத்தி உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணத்திற்கு மடாதிபதிகள் வந்து மணமக்களை வாழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது