அவதூறாக பேசினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்
பெண்கள், தனிநபர் மீது அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார், அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதை யாராலும் கேட்க முடியாது, இத்தனை ஆண்டுகள் எப்படி அமைச்சராக இருந்தார் என தெரியவில்லை.
இவ்வளவு மோசமாக பேசுவதா? தனிநபர் குறித்து பேசுவதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் ஏழை, எளிய மக்கள் வாக்களித்து தவெக அரசு வந்திருக்கிறது, அநாகரிகமாக பேசும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
