தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

Power Cut Tamil nadu
By Karthikraja May 23, 2026 02:40 PM GMT
Report

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது குறித்து அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு

தமிழ்நாட்டில் கோடைவெயில் அதிகரித்து வரும் நிலையில், ஏசி, மின்விசிறி இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி அறிவிக்கப்படாத தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் | Minister Nirmal Kumar About Tamilnadu Power Cut

இதனால், கடும் அதிருப்தியடைந்த மக்கள் சில பகுதிகளில் மின்சார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

இந்நிலையில், தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏற்படுவது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பேசியுள்ளார். 

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் | Minister Nirmal Kumar About Tamilnadu Power Cut

இதில் பேசிய அவர், "மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாக மின்சாரம் டிரிப் ஆகி மின் தடை ஏற்படுகிறது. பழைய டிரான்ஸ்பார்ம்கள் இருப்பதால் ஒரு சில இடங்களில் பழுது ஏற்படுகிறது.

மீண்டும், மீண்டும் மின் தடை ஏற்படும் பகுதிகளில் துணை மின் நிலையங்கள், நிலத்தடி கம்பியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன.

மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்ய பராமரிப்பு குழுக்கள் அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சில அதிகாரிகள் மெத்தனப்போக்காக உள்ளனர். சில குறிப்பிட்ட இடங்களில், தனிநபர்களின் தவறான செயல்பாடுகளால் மின்சாரம் தடைபடுவது கண்டறியப்பட்டிருக்கிறது.

அவர்கள் யாருடைய தூண்டுதலின் பேரில், என்ன காரணத்திற்காக அவ்வாறு செயல்படுகிறார்கள் என்று தற்போது வரை தெரியவில்லை.

பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அம்மாதிரியான தவறுகளில் ஈடுபடும் நபர்கள் மீது இன்று இரவுக்குள் மிகக் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.